உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி 3 பேருக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்

சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி 3 பேருக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்

கெங்கவல்லி சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனப்பகுதியில் விலங்கு, சந்தன மரங்கள் கடத்தலை தடுக்க, காப்புக்காடு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை, வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தபோது, 3 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வனப்பகுதியில் சென்றது கண்டறியப்பட்டது. விசாரணையில் கல்வராயன்மலை, கிராங்காடு சந்திரன், 40, ஆண்டி, 45, சடையன், 48, என தெரிந்தது. அவர்களை, வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் குழுவினர் பிடித்து விசாரித்ததில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிந்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின், 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து ஆத்துார் வனக்கோட்ட அலுவலர் ஆரோக்ய ராஜ் சேவியர் நேற்று, 3 பேருக்கும், 1.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ