உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 கடைகள் பூட்டு உடைப்பு

3 கடைகள் பூட்டு உடைப்பு

தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தானை சேர்ந்தவர் திருமால், 41. இவர், தலைவாசல், வீரகனுார் சாலையில் உள்ள தனியார் வணிக வளாக கடையில், பத்திரம் எழுதும் கடை வைத்துள்ளார்.அதே கட்டடத்தில் ஆரத்தி அகரத்தை சேர்ந்த பெரியசாமி, 50, பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். அருகே வேப்பநத்தம், பொன்-னொளி நகரை சேர்ந்த, மோகன்ராஜ், 30, 'டிராக்டர் ஸ்பேர்பார்ட்ஸ்' கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடை-களை பூட்டிச்சென்றனர். ஆனால், 3 கடைகளின் வெளிப்புற பூட்-டுகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.நேற்று காலை பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சிய-டைந்த உரிமையாளர்கள், உள்ளே சென்று பார்த்தபோது எதுவும் திருடுபோகவில்லை. இருப்பினும் தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை