மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த நாகப்பாம்பு மீட்பு
07-Sep-2025
ஆத்துார்:ஆத்துார், கல்பகனுார் புதுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 45. இவரது, 60 அடி ஆழம், 40 அடி தண்ணீர் உள்ள விவசாயக்கிணற்றில் பாம்புகள் இருந்தன.இதுகுறித்து நேற்று மதியம் மணிகண்டன் அளித்த தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், அங்கு சென்று, கிணற்றில் இறங்கி, இரு நாகம், ஒரு கட்டு விரியன் என, 3 பாம்பு களை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
07-Sep-2025