உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குத்துச்சண்டை போட்டி 300 பேர் பங்கேற்பு

குத்துச்சண்டை போட்டி 300 பேர் பங்கேற்பு

குத்துச்சண்டை போட்டி300 பேர் பங்கேற்புசேலம், நவ. 21-சேலம் பள்ளி குழந்தைகள் சார்பில், 68வது குடியரசு தின விளையாட்டு போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நடக்கிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, டேக்வாண்டோ போட்டி நேற்று நடந்தது. அதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திறமைகளை வெளிப்படுத்தினர். அதேபோல் குத்துச்சண்டை போட்டி நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் தொடங்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள், நடுவராக இருந்து மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களை வழங்கினர். இன்று சீனியர், சூப்பர் சீனியர்களுக்கு போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல், 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு பெறுவோர், ஜனவரியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ