உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பசுமை சாலை திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடல்

பசுமை சாலை திட்டத்தில் 300 மரக்கன்றுகள் நடல்

வாழப்பாடி :வாழப்பாடி நெடுஞ்சாலை உட்கோட்டம், புத்திரகவுண்டம்பாளையம் - இடையப்பட்டி நெடுஞ்சாலையோரம், கல்லேரிப்பட்டியில், பசுமை சாலைகள் திட்டம் மூலம், வேம்பு, புங்கன், நாவல், பூவரசன் உள்பட, 100 மரக்கன்றுகள் நேற்று நடவு செய்யப்பட்டு, பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டன. முன்னதாக, அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலையோரம், 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. வாழப்பாடி உதவி கோட்டப்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வாழப்பாடி நெடுஞ்சாலை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில், 1,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வாழப்பாடி உட்கோட்ட அலுவலகத்தில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை, 300 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தொடர்ந்து மரக்கன்றுகள் அடுத்தடுத்து நடப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ