உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 63 சிறப்பு முகாம்களில் 3,000 பேருக்கு சிகிச்சை

63 சிறப்பு முகாம்களில் 3,000 பேருக்கு சிகிச்சை

சேலம்: சேலம் மாவட்டத்தில் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஒன்றியத்துக்கு தலா, 3 முகாம் வீதம், 20 ஒன்றியங்களில், 60 முகாம்கள் நடந்தன. தவிர சேலம் மாநகரில், 3 என, 63 முகாம்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு முகாமும், 2 மணி நேரம் வீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடந்தன. இதன்மூலம், 3,346 பேர் பயன் அடைந்தனர். அவர்களில் குழந்தைகள், 274 பேர், கர்ப்பிணியர், 40 பேர் அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ