உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 34 தலைமை ஆசிரியர் விருப்ப இடமாறுதல்

34 தலைமை ஆசிரியர் விருப்ப இடமாறுதல்

சேலம், தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் இடமாறுதல் கோரும் கலந்தாய்வு நடந்தது. அதன்படி சேலம் செயின்ட் பால் மேல்நிலைப்பள்ளியில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தது. அதில் மாவட்டத்தில், 45 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 43 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 19 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 15 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், விருப்ப இடத்தை தேர்வு செய்து, அதற்கான உத்தரவை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ