35,500 கனஅடி நீர் திறப்பு விசைப்படகு இயக்கம் நிறுத்தம்
மேட்டூர், மேட்டூர் அணை நடப்பாண்டில், 7ம் முறையாக, கடந்த, 20ல் நிரம்பியது. அணைக்கு இரு நாட்களாக வினாடிக்கு, 35,500 கனஅடி நீர் வந்தது. அதில், 21,300 கனஅடி உபரிநீர், 1,000 கனஅடி நீர் பாசனம் என, 22,300 கனஅடி நீர், அணை நீர்மின் உற்பத்தி நிலையங்கள் வழியே வெளியேற்றப்பட்டது. மேலும், 500 கனஅடி நீர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும், 12,700 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்பட்டது.காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இயக்கப்படும் விசைப்படகு போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள், ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை கதவணை வழியே, 6 கி.மீ., சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது.சுற்றுலா பயணியருக்கு தடைஆத்துார் அருகே கல்வராயன்மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கல்லாநத்தம் ஊராட்சி, முட்டலில் உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் நேற்று காலை முதல், நீர்வரத்து அதிகரித்தது. அங்கு சுற்றுலா பயணியர் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். அதேபோல் முட்டல் ஏரி, பூங்கா பகுதிக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை. அதேநேரம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.