உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 6 பவுன் நகை திருடிய 4 பேர் சிக்கினர்

6 பவுன் நகை திருடிய 4 பேர் சிக்கினர்

சேலம், சேலம், மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி, 46. சில தினங்களுக்கு முன், இவரது வீட்டில் இருந்த, 6 பவுன் நகை திருடுபோனது. அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், பள்ளப்பட்டியை சேர்ந்த பாண்டியன், 42, சாமிநாதபுரம் ஜெயராஜ், 52, மணிகண்டன், 26, இடைப்பாடி வசந்த், 20, ஆகியோர் திருடியது தெரிந்தது. அவர்களை, நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், 4 பவுன் நகை, 2 பைக், 2 லேப் டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எங்கெங்கு கைவரிசை காட்டியுள்ளனர் என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ