உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்பனை 4 பேர் சிக்கினர்

கஞ்சா விற்பனை 4 பேர் சிக்கினர்

சேலம், சேலம், கிச்சிப்பாளையம் போலீசார், களரம்பட்டியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, 3 பேரை பிடித்து விசாரித்ததில், சேலம், தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையை சேர்ந்த சாரதி, 23, கார்த்தி, 26, ஜீவானந்தம், 21, என்பதும், அவர்கள், 4 கிலோ கஞ்சாவை விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் அன்னதானப்பட்டி போலீசார், தாதகாப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அம்பாள் ஏரி சாலையை சேர்ந்த சதீஷ், 29, என்பவரை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ