உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியர் உள்பட 4 பேர் மாயம்

மாணவியர் உள்பட 4 பேர் மாயம்

சேலம்: சேலம், பழைய சூரமங்கலத்தை சேர்ந்த ஜெயப்பிரதா மகள் பிரி-யங்கா, 19. நங்கவள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ., முதலாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லுாரி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜெயப்பிரதா புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையத்தை சேர்ந்த, கவிதா மகள் கபிலா, 19. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்-கிறார். கடந்த, 28ல் கல்லுாரி சென்ற அவர், திரும்பி வரவில்லை. கவிதா புகார்படி, காரிப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 55. இவர் கடந்த பிப்., 12ல், கொல்லிமலைக்கு செல்வதாக கூறி புறப்-பட்டார். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது மகள் சத்யா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி சூரமங்கலம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.அஸ்தம்பட்டி, கோர்ட் சாலையை சேர்ந்த சுகுமார் மனைவி பூங்-கொடி, 51. வீட்டு வேலை செய்கிறார். சற்று மனநலம் பாதிக்கப்-பட்ட இவர், கடந்த, 28ல் மாயமானார். சுகுமார் புகார்படி அஸ்-தம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை