மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
12-May-2025
சேலம், சேலம், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில், கடந்த மார்ச், 7 இரவு, வெண்கல சுவாமி சிலைகள் திருடுபோனது. அம்மாபேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த சங்கர், ஹரிஹரன், சந்தோஷ், ஒரு சிறுவன் என, 4 பேர், 5 சிலைகளை திருடியது தெரிந்தது. இந்த வழக்கில் சிறுவன் மற்றும் சந்தோஷ் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரும், வேறு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த இருவரையும் நேற்று முன்தினம் காவலில் எடுத்து, 4 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, 5 சிலைகளையும் மீட்டனர். பின் சங்கர், ஹரிஹரனை, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
12-May-2025