உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார்கள் மோதல் 5 பேர் படுகாயம்

கார்கள் மோதல் 5 பேர் படுகாயம்

மேட்டூர், மேட்டூர் அணை, 16 கண் மதகு புது பாலம் வழியே, நேற்று மதியம், 3:00 மணிக்கு, 'கிவிட்' கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே திருப்பத்துாரில் இருந்து ஈரோடு நோக்கிச்சென்ற மகேந்திரா கார் மீது மோதியது. தொடர்ந்து சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி வந்த, 'பல்சர்' பைக் மீதும் மோதியது. இதில் கிவிட் காரில் இருந்த சக்திவேல், 32, சுகுணா, 30, சக்திவேல் தாய் சிவகாமி, 52, பைக்கில் வந்த, சேலம், கிச்சிப்பாளையம், கேசவன், 27, மகேந்திரா காரில் வந்த, கவிப்பிரியா, 42, மகன்கள் இபின், 13, எலிக், 15, ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த, 2 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த, 5 பேர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை