உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தந்தங்கள் பதுக்கிய 5 பேருக்கு 1 வார காவல்

தந்தங்கள் பதுக்கிய 5 பேருக்கு 1 வார காவல்

மேட்டூர், ஜன. 4-கொளத்துார், ஏழரைமத்திக்காடு கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த யானைகளின், 4 தந்தங்களை, நேற்று முன்தினம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதை பதுக்கிய, புரோக்கர்கள், 5 பேரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர்கள் கோவிந்தபாடி பழனி, 48, தலைவாசல் செல்வகுமார், 40, குரும்பனுார் பெருமாள், 50, ஏழரைமத்திக்காடு ஒண்டியப்பன், 59, வாழப்பாடி அருணாசலம், 46, என தெரிந்தது. அவர்களை, நேற்று மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 மாஜிஸ்திரேட் பத்மபிரியா முன் ஆஜர்படுத்தினர். அவர்களை, வரும், 10 வரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ