உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெங்கவல்லி உள்பட 5 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு

கெங்கவல்லி உள்பட 5 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்வு

ஆத்துார், சேலம் மாவட்டத்தில், எஸ்.ஐ., அலுவலர்களாக இருந்த, ஐந்து போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் நிலைய அதிகாரி கொண்டதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த ஏப்., 29ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், போலீஸ் மானியகோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் ஸ்டாலின், பதில் அளித்தபோது, 110வது விதியின் கீழ், 27வது அறிவிப்பாக சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும், அன்றாட அவசர நிலைகளை கையாளும் வகையில், 280 இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்படும் என, முதல்வர் அறிவித்தார்.அதன்படி சேலம் மாவட்டத்தில், ஆத்துார் அருகே கெங்கவல்லியில், 1998, ஆக., 12ல், புறக்காவல் நிலையமாக இருந்தது. 2001 செப்., 2ல், எஸ்.ஐ., நிலைய அதிகாரியாக கொண்ட ஸ்டேஷனாக அறிவித்து செயல்பட்டு வந்தது. இந்த ஸ்டேஷனை, இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக அறிவிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், கெங்கவல்லி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நங்கவள்ளி, பூலாம்பட்டி, பனமரத்துப்பட்டி, தொளசம்பட்டி எஸ்.ஐ., ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி