உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு சத்துணவு அமைப்பாளர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

ஓய்வு சத்துணவு அமைப்பாளர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே, சாத்தப்பாடி, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த, ஜெயவேல் மனைவி சந்திரா, 67. ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான இவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று, மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டினுள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த, ஐந்து பவுன் செயின் திருட்டுபோனது தெரியவந்தது. வீட்டின் மேற்பகுதியில் உள்ள ஓடுகளை கழற்றி உள்ளே வந்த மர்ம நபர்கள், மீண்டும் ஓடு வழியாகச் சென்று, ஓடுகளை வைத்து மூடிச் சென்றுள்ளனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ