மேலும் செய்திகள்
பணியில் அலட்சியம்; எஸ்.ஐ., இடமாற்றம்
01-Sep-2025
சேலம், சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், பணியில் அலட்சியம், புகார் மீது நடவடிக்கை எடுக்காத விவகாரம் தொடர்பாக, எஸ்.பி., கவுதம்கோயல் விசாரித்து, போலீசாரை இடமாற்றி வருகிறார். அதன்படி, பணியில் அலட்சியம் புகாரில் நேற்று, ஆத்துார் டவுன் எஸ்.ஐ., சக்திவேல், வீரகனுார் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். வீரகனுார் எஸ்.ஐ., தினேஷ்குமார், சேலம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். கருமலைக்கூடல் எஸ்.ஐ., சபாபதி தம்மம்பட்டிக்கும்; பூலாம்பட்டி எஸ்.ஐ., மலர்விழி, ஓமலுார் மகளிர் ஸ்டேஷனுக்கும்; தாரமங்கலம் எஸ்.ஐ., மாதையன், பூலாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்து, எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று உத்தரவிட்டார்.
01-Sep-2025