உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் கோப்பை போட்டி தொடக்கம் 54,000 பேர் ஆன்லைனில் பதிவு

முதல்வர் கோப்பை போட்டி தொடக்கம் 54,000 பேர் ஆன்லைனில் பதிவு

சேலம், தமிழக அரசு சார்பில், சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், மக்கள் என, 5 பிரிவுகளில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. முன்னதாக சுற்றுாலத்துறை அமைச்சர் ராஜேந்திரன், காந்தி மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுதும், 35,996 மாணவர்கள், 7,633 கல்லுாரி மாணவர்கள், 2,165 மாற்றுத்திறனாளிகள், 1,625 அரசு ஊழியர்கள், 6,738 மக்கள் என, 54,157 பேர், இப்போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.இதில் காந்தி மைதானத்தில் தடகளம், வாலிபால், கூடைப்பந்து போட்டிகள்; அரியானுார் வி.எஸ்.ஏ., கல்லுாரியில் சிலம்பம், கேரம், கோ - கோ; நகரமலை அடிவாரத்தில் உள்ள தனியார் அகாடமியில் மேசைப்பந்து; நெத்திமேடு ஜெயராணி பள்ளியில் கைப்பந்து; 4 ரோடு சிறுமலர் பள்ளியில் கால்பந்து; கோட்டை மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் இறகுப்பந்து என, 6 இடங்களில் நேற்று நடந்த போட்டிகளில், 10,000 மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி