மண் கடத்துவதை தட்டிக்கேட்ட சகோதரர்களை தாக்கிய 6 பேர் கைது
தலைவாசல், தலைவாசல், புளியங்குறிச்சியில் உள்ள ஏரியில் பொக்லைன் உதவியுடன், 4 டிராக்டர்களில் சிலர் மண் கடத்த முயன்றனர். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த, வி.சி., கட்சியின் தலைவாசல் ஒன்றிய துணை செயலர் சரத்குமார், 33, அவரது தம்பி ஆட்டோ டிரைவர் அஜித்குமார், 28, தட்டிக்கேட்டனர். இதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.பின் அங்கிருந்து சென்ற சரத்குமார், அஜித்குமாரை, மண் கடத்த முயன்றவர்கள், இரும்பு கம்பியால் தாக்கினர். மண்டை உடைந்த நிலையில் அஜித்குமார், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் சரத்குமார், மற்றொரு தரப்பில் ராஜேந்தின், 27, கணேசன், 25, ஆகியோரும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து அஜித்குமார் புகார்படி, செந்தில்குமார், 43, ராஜி, 65, மணி, 34, சக்திவேல், 37, பொக்லைன் ஆப்பரேட்டர் அஜித், 24, அருள்மணி, 60, ஆகியோரை, நேற்று தலைவாசல் போலீசார் கைது செய்தனர். தவிர கணேசன், 40, ராஜேந்திரன், 27, சஞ்சீவ், 30, மீது வழக்குப்பதிந்தனர். அதேபோல் ராஜேந்திரன் புகாரில் சரத்குமார், அஜித்குமார் மீது வழக்குப்பதிந்தனர்.