உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 6 வீடுகள் இடிந்து சேதம்

6 வீடுகள் இடிந்து சேதம்

தலைவாசல், டிச. 2-தலைவாசல் அருகே வீரகனுார், வடக்கு வீதியை சேர்ந்தவர் ஆராயி, 48. இவரது மகள் வனிதா, 30. இவரது சகோதரனின் குழந்தைகள் இருவர் என, 4 பேரும், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட, அவர்களது வீட்டின் வெளிப்புற சுவர் இடிந்து விழுந்ததில், 4 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இருப்பினும் பீரோ, கட்டில், ப்ரிட்ஜ் உள்ளிட்டவை சேதமடைந்தன. அதேபோல் வீரகனுார் அம்பிகா கூரை வீட்டின் ஒருபுற சுவர் இடிந்து விழுந்தது. கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், கிழக்கு வீதியை சேர்ந்த மாணிக்கம், 55, ஊமையன், 54, ஆகியோரது கூரை வீடுகளின் ஒருபுற சுவர்களும் இடிந்து விழுந்தன. நடுவலுாரில், 'டிவி' மெக்கானிக் பிலிப்ஸ், 40, என்பவரது கூரை வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. ஆத்துார் அருகே, பழனியாபுரி கணேசன் என்பவரது ஓட்டு வில்லை வீட்டின் ஒருபுற சுவரும் இடிந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.காற்றுடன் மழையால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ