ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி
சேலம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அம்மகளத்துாரைச் சேர்ந்தவர் கணேசன், 67; இவரது மனைவி ராஜாம்மாள், 60. இவர்களது மகன்கள் முத்தையன், 40, கண்ணன், 32, உட்பட ஆறு பேர், விஷம் குடித்து மயங்கினர். தகவலறிந்த, கீழ்குப்பம் போலீசார் ஆறு பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.போலீசார் கூறுகையில், 'சுவாமி சிலைகளுக்கு பாலீஷ் போட பயன்படுத்தப்படும் பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்துள்ளது. கந்து வட்டி தொல்லையால், இவர்கள் ஆறு பேரும் விஷம் குடித்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.