உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 6 புதிய பஸ்கள் இயக்கம் அமைச்சர் துவக்கிவைப்பு

6 புதிய பஸ்கள் இயக்கம் அமைச்சர் துவக்கிவைப்பு

சேலம்: பழைய பஸ்களுக்கு பதில் புதிதாக, பி.எஸ்., 6 வகை பஸ்-களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 6 புது பஸ்களை நேற்று, சேலம் புது பஸ் ஸ்டாண்டில், மக்கள் பயன்பாட்டுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பொள்ளாச்சிக்கு, 3, சென்-னைக்கு, 2, மதுரைக்கு, 1 பஸ்கள் இயக்கப்பட்டன.இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், ''போக்குவ-ரத்துக்கழகம் மூலம் சேலம் மாவட்டத்துக்கு, 15 டவுன் பஸ்கள், 76 புறநகர் என, பி.எஸ்., 6 வகையில், 94 புறநகர் பஸ் சேவை, மக்கள் பயன்பாட்டில் உள்ளது,'' என்றார்.இதில் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்-திரன், மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், போக்குவரத்து சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் ஜோசப் பயஸ், பொது மேலாளர் கோபால-கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ