650 டன் குப்பை சேகரிப்பு
சேலம், சேலம் மாநகராட்சியில் உள்ள வீடுகள், கடை, நிறுவனங்களில் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்கள், பூஜை செய்த பூசணிக்காய் உள்ளிட்ட குப்பையை, ஏராளமானோர் தெரு ஓரங்களில் கொட்டினர். தொடர்ந்து துாய்மை பணியாளர்கள், தெரு தெருவாக குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தினமும், 400 முதல், 450 டன் வரை சேகரிக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையால், 650 டன்னாக உயர்ந்தது. நேற்றும் குப்பை சேகரிப்பு பணி தொடர்ந்தது. இதில் மட்கும் குப்பை பிரிக்கப்பட்டு, நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது.