உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெங்கவல்லியில் 74 மி.மீ., மழை

கெங்கவல்லியில் 74 மி.மீ., மழை

சேலம்: வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால், தமிழகத்தின், 33 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி சேலத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது.புது பஸ் ஸ்டாண்டில் அதிகளவில் தண்ணீர் தேங்கி, பயணியர் அவதிக்கு ஆளாகினர். அதேபோல் சாரதா கல்லுாரி சாலையில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்றனர்.அதேபோல் ஆத்துார், கெங்கவல்லி, நடுவலுார், தெடாவூர், கூடமலை, கடம்பூர், தம்மம்பட்டி பகுதி களில் நேற்று மாலை, ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். தம்மம்பட்டியில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியதால், துர்நாற்றத்துடன் மக்கள் அவதிப்பட்டனர்.மேலும் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு விபரம்: கெங்கவல்லி, 74 மி.மீ., பெத்தநாயக்கன்பாளையம், 27, வாழப்பாடி, 24.8, சங்ககிரி, 15, ஓமலுார், 14, ஏற்காடு, 10.2, தலைவாசல், 10, இடைப்பாடி, 8, மேட்டூர், 7.4, ஆத்துார், 6.3, சேலம், 5.2, காடையாம்பட்டி, 2 மி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை