உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 760 போதை மாத்திரை பறிமுதல்; 6 பேர் கைது

760 போதை மாத்திரை பறிமுதல்; 6 பேர் கைது

சேலம்: சேலம், ஜங்ஷன் அருகே நேற்று, செவ்வாய்ப்பேட்டை போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, அங்கிருந்த கும்பலை சுற்றிவளைத்து சோதனை செய்ததில், 760 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில் சூரமங்கலத்தை சேர்ந்த சந்தோஷ், 24, செவ்வாய்ப்பேட்டை தட்சிணாமூர்த்தி, 23, அர்சுணன், 27, பள்ளப்பட்டி தனிஷ், 25, ஜான்சன்பேட்டை தங்கபாண்டியன், 21, அய்யம்பெருமாம்பட்டி பிரசாத், 24, என்பதும், அவர்கள், போதை மாத்திரை விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுவதும் தெரிந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், 6 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை