உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., முன்னாள் முதல்வரின் 7ம் ஆண்டு நினைவு நாள்

தி.மு.க., முன்னாள் முதல்வரின் 7ம் ஆண்டு நினைவு நாள்

சேலம், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், எம்.பி.,யுமான சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தி.மு.க., முன்னாள் முதல்வரும், தலைவருமாக இருந்த கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவை போற்றும் வகையில் வரும், 7ம் தேதி காலை 8:00 மணியளவில் வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் முதல், வாழப்பாடியில் உள்ள மாவட்ட ஸ்டாலின் அறிவாலயம் வரை, அமைதி பேரணி சென்று, கருணாநிதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம்.ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்டஅனைத்து முற்போக்கு லட்சியங்களுக்காக, தனது வாழ் நாள் முழுவதும் வாதாடி போராடியவர் கருணாநிதி. அவர் நம்மை விட்டு பிரிந்தாலும், சரித்திர சாதனைகளாலும், கலாசார நினைவுகளோடு நம்மோடு வாழ்ந்து வருகிறார்.கருணாநிதி நினைவு நாளையொட்டி ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர், முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட உதவிகளை செய்திட வேண்டும். அவரவர் பகுதிகளில் வீட்டு முன், அவரது படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டும்.இந்நிகழ்வில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ., -எம்.பி.,க்கள், வார்டு செயலர்கள், கிளை செயலர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ