உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதுநிலை ஆய்வாளர் 8 பேர் இடமாற்றம்

முதுநிலை ஆய்வாளர் 8 பேர் இடமாற்றம்

சேலம்; சேலம் மாவட்ட வருவாய் அலகில், வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், 8 பேரை இடமாற்றம் செய்து, டி.ஆர்.ஓ., ரவிக்-குமார், நேற்று உத்தரவிட்டார். அதன்படி தலை-வாசல், வட்ட வழங்கல் பிரிவு ராமலிங்கம், அதே வட்ட தலைமையிடத்துக்கும், அவருக்கு பதில் சேலம் வட்ட மகேஸ்வரி, தலைவாசலுக்கும் மாற்றப்பட்டனர்.அதேபோல் சேலம் வட்ட தலைமையிடத்து முரளிகுமார், மேச்சேரி குறுவட்டம்; அங்கு பணி-யாற்றிய குமார், பெத்தநாயக்கன்பாளையம்; ஏற்-காடு, சமூக பாதுகாப்பு திட்ட தனராஜ், பூலாம்பட்டி வருவாய் ஆய்வாளர்; சேலம், நில எடுப்பு பிரிவு நீதிபதி, ஏற்காடு சமூக பாதுகாப்பு திட்டம்; சேலம், கனிம வளப்பிரிவு கனகராஜ், சங்ககிரி; மேட்டூர் வட்ட தலைமையிட ராமதாசு, ஓமலுார், சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !