உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாவட்டத்தில் 13 அரசு பள்ளி உள்பட 89 பள்ளிகள் சதம்

சேலம் மாவட்டத்தில் 13 அரசு பள்ளி உள்பட 89 பள்ளிகள் சதம்

சேலம், மே 9பிளஸ் 2 பொதுத்தேர்வில், சேலம் மாவட்டத்தில், 13 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்பட, 89 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதன் விபரம்:அரசு பள்ளிகள்சேலம் அரசு முன்மாதிரி பள்ளி; வீரபாண்டி, தாரமங்கலம், இடைப்பாடி, கொங்கணாபுரம் அரசு மாதிரி பள்ளிகள்; திருமனுார், நாழிக்கல்பட்டி, வெள்ளரிவெள்ளி, சனாவூர், நட்டுவம்பாளையம், அரா செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள்; ஏற்காடு ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளி; அபிநவம் ஏகலைவா மாதிரி உறைவிட மகளிர் பள்ளி. உதவி பெறுபவைஅரிசிப்பாளையம் செயின்மேரீஸ், மேட்டூர் அணை செயின் மேரீஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள்; ஏற்காட்டில் மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன், செக்ரட்ஹார்ட் மகளிர் ஆங்கிலோ இந்தியன், நஷ்ரத் மகளிர் மேல்நிலை, செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள்.சுயநிதி ஜலகண்டாபுரம் மினர்வா; இடைப்பாடி ரிலையன்ஸ்; வெள்ளார் சோனாசன் ஹைடெக்; குட்டப்பட்டி சரஸ்வதி வித்யாலயா; மலையடிப்பட்டி வித்யாபாரதி; பொட்டனேரி ஸ்ரீராம் வித்யாயலா; தங்காயூர் யுனிவர்சல்; காகாபாளையம் லோட்டஸ்; திருச்செங்கோடு பி.எஸ்.ஜி.,; வடுகப்பட்டி பி.எஸ்.எப்., ஆகிய மெட்ரிக் பள்ளிகள்.ஆத்துார் விநாயகபுரம் டி.எஸ்.பி.,; சாமியார்கிணறு ஜெயம்; ஆணையாம்பட்டி நேஷனல்; கருமந்துறை பிரபாவதி; இலுப்பநத்தம் ராமகிருஷ்ணா; நடுவலுார் ஜி.இ.டி.,; நடுவலுார் வித்யாபாராதி; பெத்தநாயக்கன்பாளையம் சுவாமி; பேர்லண்ட்ஸ் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக், மாசிநாயக்கன்பட்டி ஸ்ரீசுவாமி ஆகிய மெட்ரிக் பள்ளிகள்.வெள்ளக்கல்பட்டி கொங்கு; பஞ்சுகாளிப்பட்டி சவுத் இந்தியன்; கருப்பூர் எஸ்.கே.வி., ஹைடெக்; முத்துநாயக்கன்பட்டி ஜி.ஆர்.,; தாசநாயக்கன்பட்டி கோல்டன் சாய்ஸ்; சின்னகொல்லப்பட்டி மவுண்ட் மேரி; பழைய சூரமங்கலம் எஸ்.பி.கே.,; சீலநாயக்கன்பட்டி பைபாஸ் என்.பி.ஆர்., சன்னியாசிகுண்டு செங்குந்தர்; நெய்காரப்பட்டி ஸ்ரீவித்யாபாரதி ஆகிய மெட்ரிக் பள்ளிகள்பழனியாபுரம் கோகுலம்; சேலம் சாரதா பாலமந்திர்; குகை செயின்ட் ஜோசப்; சூரமங்கலம் தாரூஸ் சலாம்; வாழப்பாடி செயின்ட் மைக்கேல்ஸ்; கவரக்கல்பட்டி ஹோலி சில்ரன்; பேளூர் சக்தி விகாஸ்; சேசஞ்சாவடி கலைமகள் வித்யா மந்திர்; வெள்ளக்கல்பட்டி கோல்டன் ஸ்பார்க்; காமலாபுரம் ஜான் பிரிட்டோ ஆகிய மெட்ரிக் பள்ளிகள்.பெருமாம்பட்டி ஷாலோம் கான்வென்ட்; ராமமூர்த்தி நகர் நியூ இண்டியா; காடையாம்பட்டி கோல்டன் ரேய்ஸ்; சிறுவாச்சூர் பாரதி வித்யாலயா; வடசென்னிமலை ஜெயபாரத்; அம்மம்பாளையம் சரஸ்வதி; நரசிங்கபுரம் எஸ்.ஆர்.வி., சேலம் எஸ்.ஆர்.கே.,; பனமரத்துப்பட்டி வேதவிகாஸ்; பெருமாள் மலை அடிவாரம் ஏ.ஆர்., ஆகிய மெட்ரிக் பள்ளிகள்.மொரசப்பட்டி அமலா; மாதையன்குட்டை எம்.ஏ.எம்.,; மேச்சேரி மீனம்பார்க்; கொளத்துார் மான்போர்டு; குஞ்சாண்டியூர் ரமேஸ் வித்யாஸ்ரம்; மேச்சேரி ராகவேந்திரா; இடைப்பாடி விஸ்டம்; வனவாசி ஈஷா வித்யா ரமணீயம்; நெய்க்காரப்பட்டி எஸ்.பி.எஸ்.,; கந்தம்பட்டி ஈக்விடாஸ் குருகுல்; சுப்ரமணிய நகர் மாடர்ன் ஆகிய மெட்ரிக் பள்ளிகள்.ஜெம்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி; கொங்கணாபுரம் ஏ.ஜி.என்.,; ஏற்காடு மான்ட்போர்ட் கம்யூனிட்டி; கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம்.,; தளவாய்பட்டி காயத்ரி; நாகிசெட்டிப்பட்டி வித்யாசாகர்; தாரமங்கலம் ஜோதி; ராஜபாளையம் வித்யாவாஷினி; பொன்னம்மாபேட்டை நியூ இந்தியா டிஸ்கவரி ஆகிய மேல்நிலைப்பள்ளிகள்.94 சதவீத தேர்ச்சிதமிழகத்தில் கடந்த மார்ச்சில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தில், 17,185 மாணவர்கள், 19,709 மாணவியர் என, 36,894 பேர் பங்கேற்றனர். நேற்று தேர்வு முடிவு வெளியானதில், சேலம் மாவட்டத்தில், 15,876 மாணவர்கள், 18,921 மாணவியர் என, 34,797 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 94.32 சதவீதம். கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், சேலம் மாவட்டத்தில், 94.60 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், நடப்பாண்டு அதை விட, 0.28 சதவீதம் குறைந்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்களில், 92.38 சதவீதம், மாணவியர், 96 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.இதில் மாவட்டத்தில் உள்ள, 160 அரசு பள்ளிகளில் இருந்து, 8,672 மாணவர்கள், 11,801 மாணவியர் என, 20,473 பேர் தேர்வெழுதினர். இதில், 7,733 மாணவர்கள், 11,159 மாணவியர் என, 18,992 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 92.28 சதவீதம். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 91.97 சதவீதமாக இருந்த நிலையில், அதை விட, 0.31 சதவீதம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ