உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் கல்லுாரி பஸ் மீது லாரி மோதி 9 பேர் காயம்

தனியார் கல்லுாரி பஸ் மீது லாரி மோதி 9 பேர் காயம்

ஓமலுார்: தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தனியார் கல்லுாரி பஸ் மீது, டிப்பர் லாரி மோதி ஒன்பது பேர் காயமடைந்தனர்.ஓமலுார் அருகே சிக்கனம்பட்டியில், தனியார் கலை அறிவியல் கல்லுாரி உள்ளது. நேற்று அந்த கல்லுாரி பஸ் பண்ணப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து மாணவ, மாணவியருடன் புறப்பட்டது. சிவா என்ற ஓட்டுனர் பஸ்சை ஓட்டி வந்துள்ளார். 9:00 மணியளவில், தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கனம்பட்டியில் திடீரென வலது புறம் திரும்பிய போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பஸ்ஸின் நடுப்பகுதி சேதமானது. பஸ்சில் இருந்த மாணவ, மாணவியர் ஒன்பது பேருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன், பஸ் ஓட்டுனர் ஓடி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், ஜனனி என்ற மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பஸ், லாரியை பறிமுதல் செய்து, ஓமலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை