உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு மருத்துவமனைக்கு 98 யுனிட் ரத்தம் வழங்கல்

அரசு மருத்துவமனைக்கு 98 யுனிட் ரத்தம் வழங்கல்

தலைவாசல்:இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பாரதி மகாத்மா பண்பாட்டு பேரவை, இந்திய மருத்துவ சங்கம், தலைவாசல் லயன்ஸ் கிளப் சார்பில் ரத்த தானம் முகாம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் நேற்று நடந்தது. சொசைட்டி சேர்மன் ஜோசப்தளியத் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், 75ம் முறை ரத்த தானம் செய்தார். இதில், 98 யுனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. சொசைட்டிநிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !