உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பருவமழையை பயன்படுத்தி தென்னங்கன்று நட அழைப்பு

பருவமழையை பயன்படுத்தி தென்னங்கன்று நட அழைப்பு

பருவமழையை பயன்படுத்திதென்னங்கன்று நட அழைப்புஓமலுார், நவ. 16--பருவமழையை பயன்படுத்தி தென்னங்கன்று நட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காடையாம்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குமரவேல் அறிக்கை:காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டையில் தோட்டக்கலைத்துறை சார்பில், அரசு தென்னை நாற்றுப்பண்ணை உள்ளது. அங்கு பாரம்பரிய அரசம்பட்டி நெட்டை, வீரிய ரக நெட்டை குட்டை தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.நடப்பாண்டில், 63,500 கன்றுகள் விற்றுள்ளன. 53,500 நெட்டை கன்றுகள் தலா, 65 ரூபாய், 11,000 நெட்டை குட்டை ரக கன்றுகள் தலா, 125 ரூபாய்க்கு தயாராக உள்ளன. தற்போது பருவ மழையை பயன்படுத்தி நடவு செய்ய கன்றுகளை பெற விரும்புவோர், 8110965548, 9384125705 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ