உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆழமான பகுதிக்கு சென்று போட்டோ ஏரி சேற்றில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி

ஆழமான பகுதிக்கு சென்று போட்டோ ஏரி சேற்றில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், மந்தைவெளியை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் திருச்சிற்றம்பலம் சிவா, 18. இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது பள்ளி நண்பர் சபரீஸ்வரனுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். பின் மற்றொரு நண்பர் மனோஜ் என்பவரையும் அழைத்துக்கொண்டு நேற்று மதியம், 1:00 மணிக்கு ஆத்துார், அய்யனார் கோவில் ஏரிக்கு குளிக்க சென்றனர்.ஏரிக்குள் இறங்கிய திருச்சிற்றம்பலம் சிவா, மொபைல் போனில் புகைப்படம் எடுக்கும்படி, நண்பர்களிடம் கூறினார். அப்பாது ஆழமான பகுதிக்கு சென்ற திருச்சிற்றம்பலம்சிவா, சேற்றில் சிக்கி மூழ்கினார். நண்பர்கள் கூச்சலிட்டனர். 1:30 மணிக்கு ஆத்துார் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். 10 நிமிடத்தில் அங்கு வந்த வீரர்கள், ஒரு மணி நேரத்துக்கு பின் திருச்சிற்றம்பலம் சிவாவை இறந்த நிலையில் மீட்டனர். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ