உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பராமரிப்பு பணியில் ஒப்பந்த ஊழியர் மின் வினியோகம் கொடுத்ததால் பலி

பராமரிப்பு பணியில் ஒப்பந்த ஊழியர் மின் வினியோகம் கொடுத்ததால் பலி

பராமரிப்பு பணியில் ஒப்பந்த ஊழியர்மின் வினியோகம் கொடுத்ததால் பலிவீரபாண்டி, நவ. 22-பராமரிப்பு பணியில் ஒப்பந்த ஊழியர் ஈடுபட்டிருந்த நிலையில், மின்சார வினியோகம் செய்யப்பட்டதால் பலியானார்.ஓமலுார் அருகே கோணகாபாடி, முதலியூரை சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார், 27. இவர், 5 ஆண்டுகளாக காகாபாளையம் அருகே வேம்படிதாளம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் அலுவலக பகுதிகளில் மாதாந்திர மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.இதனால் திருவளிப்பட்டியில் உள்ள மின் கம்பத்தில் சதீஷ்குமார் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மதியம், 2:30 மணிக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டதில், கம்பத்தில் இருந்த சதீஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்து விழுந்தார். படுகாயமடைந்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை