மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத உடல்
07-Sep-2024
ஆத்துார்: சேலம், சின்னகொல்லப்பட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரன், 53. மாற்றுத்திறனாளியான இவர், கடந்த, 16ல், 'ஜூபிடர்' மூன்று சக்கர மொபட்டில் ஆத்துாரில் இருந்து, சேலம் நோக்கிச்சென்று-கொண்டிருந்தார். புது உடையம்பட்டி சென்றபோது மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.
07-Sep-2024