உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மர அறுப்பு மில்லில் பயங்கர தீ ரூ.50 லட்சத்துக்கு பொருட்சேதம்

மர அறுப்பு மில்லில் பயங்கர தீ ரூ.50 லட்சத்துக்கு பொருட்சேதம்

சேலம், நவ. 21-------மர அறுப்பு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாகின.சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு பிரதான சாலையில் உள்ள, சிவா காபி பார் பின்புறம், சந்தோஷ் என்பவருக்கு சொந்தமாக, மர அறுப்பு மில் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து பிளைவுட் உள்ளிட்டவை தயாரித்து வெளி மாநிலங்களுக்கு விற்கப்படுகின்றன. நேற்று பணி முடிந்து, இரவில் மில் மூடப்பட்டிருந்தது. ஆனால் இரவு, 10:30 மணிக்கு மில்லில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, 500 மீ., பரப்பளவு உள்ள மில்லில் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதைப்பார்த்த மக்கள், தீயணைப்பு நிலையம், கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செவ்வாய்ப்பேட்டை, வாழப்பாடி, ஆட்டையாம்பட்டி, சூரமங்கலம், ஓமலுார் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது மில்லின் ஒரு புற சுவரை, பொக்லைன் மூலம் இடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் மர அறுப்பு மில் என்பதால் தொடர்ந்து தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதில் இயந்திரம், பிளைவுட், மர கதவுகள், மரங்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக அப்பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை