மேலும் செய்திகள்
பைக் மோதல்: ஊழியர் பலி
10-Apr-2025
சேலம்:சேலம் அருகே, வீராணம், மோட்டூரை சேர்ந்தவர் கந்தசாமி, 55. இவரின் மனைவி காளியம்மாள், 50. இருவரும் இளநீர் வியாபாரம் செய்தனர். நேற்று தம்பதியர், அய்யனாரப்பன் கோவில் காடு பகுதியில் சங்கரின் தோட்டத்துக்கு இளநீர் பறிக்க சென்றனர். அங்கு தென்னை மரத்தில் இருந்த தேனீக்கள் கூடு கலைந்தது. அதில் கந்தசாமி, காளியம்மாள், சங்கர் மீது தேனீக்கள் கொட்டின. படுகாயம் அடைந்த கந்தசாமி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காளியம்மாள், சங்கர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Apr-2025