நரசிங்கபுரத்தில் ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
ஆத்துார்: ஈ.வெ.ரா., குறித்து அவதுாறாக பேசி வரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ம.தி.மு.க., மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சேலம் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தில் நேற்று அவைத் தலைவர் ஜெய-ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலர் கோபால்ராசு, கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். கூட்டத்தில், 'ஜன., 25ல், மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்த வேண்டும். ஈ.வெ.ரா., குறித்து ஆபாசமாகவும், அவதுாறாகவும் பேசி வரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்மையாக கண்டிப்-பதுடன், அவர் மீது தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.