உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புதராக மாறிய பூங்கா: குழந்தைகள் தவிப்பு

புதராக மாறிய பூங்கா: குழந்தைகள் தவிப்பு

வாழப்பாடி, டிச. 22-வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து, 6வது வார்டு பிருந்தாவனம் தெருவில், இரு ஆண்டுகளுக்கு முன், 12 லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு உபகரணங்களை கொண்டு, சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி புதராக மாறி உள்ளது. இதனால் உபகரணங்கள் வீணாகி வருவதோடு, அப்பகுதியில் விஷ ஜந்துகள் நடமாட்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் பராமரிக்காமல் விட்டதால், புதராக மாறி குழந்தைகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கணேசனிடம் கேட்டபோது, ''பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை