மேலும் செய்திகள்
சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்த மக்கள்
16-Aug-2024
சேலம்: சேலம், கோரிமேட்டில் உள்ள ஏ.டி.சி., நகர் குடியிருப்பு பகுதியில் மலைபாம்பு இருப்பதாக, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகனுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதனால் வனவர் சுரேஷ், வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, 10 அடி நீள மலைபாம்பை பிடித்தனர். தொடர்ந்து வனச்சரக அலுவலகம் கொண்டு வந்தனர். பின் பாம்பு, குரும்பப்பட்டி காப்புக்காட்டில் விடப்பட்டது.பள்ளி வளாகம் சேலம், முள்ளுவாடிகேட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கோகுலநாதா இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்குள்ள மரத்தில் நேற்று காலை, பாம்பு இருப்பதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின-ரிடம் தெரிவித்தனர். அவர்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, அதிநவீன கருவியால் பாம்பை பிடித்-தனர். இதுகுறித்து வீரர்கள் கூறுகையில், 'பிடிபட்ட பாம்பு, 8 அடி இருக்கும். இது மஞ்சள் சாரை பாம்பு. வனத்துறையிடம் ஒப்ப-டைக்கப்படும்' என்றனர்.
16-Aug-2024