உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரதராஜ பெருமாள் கோவிலில்கும்பாபிேஷக பணிக்கு பாலாலயம்

வரதராஜ பெருமாள் கோவிலில்கும்பாபிேஷக பணிக்கு பாலாலயம்

வரதராஜ பெருமாள் கோவிலில்கும்பாபிேஷக பணிக்கு பாலாலயம்சேலம்சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ேஷகம் முடிந்து, 12 ஆண்டுகள் முடிந்ததால், மீண்டும் கும்பாபி ேஷகம் செய்ய, முதல்கட்டமாக, 2024 செப்., 5ல் கோபுர விமானங்கள், மடைப்பள்ளி தாயாருக்கு மட்டும் பாலாலயம் செய்து பணி தொடங்கப்பட்டது.நேற்று முன்தினம் மூலவர் தேவி, பூதேவி சமேத வரதராஜர், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், பெருந்தேவி தாயார் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களின் உருவங்களை அட்டையில் சித்திரமாக வரைந்து, மேள, தாளம் முழங்க கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அன்றிரவு பூர்வாங்க யாக பூஜை செய்து மூலவர் தெய்வங்களின் சக்தியை கும்பத்தில் ஆவாஹனம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.நேற்று காலை, 6:00 மணிக்கு சக்தியை ஆவாஹனம் செய்த கலசம், பாலாலயத்துக்கு வரையப்பட்ட சித்திரங்களை வைத்து, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் மகா பூர்ணாஹூதியுடன் பட்டாச்சாரியார்களால் பாலாலயம் செய்து வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் ஜூன், 8ல் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிட்டு, திருப்பணி தொடங்கியுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ