உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் குளித்த மாணவர் பலி

கிணற்றில் குளித்த மாணவர் பலி

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, மாருதி நகரை சேர்ந்தவர் சதாசிவம், 48. தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவரது மகன் ராகுல், 14. தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று மதியம் 2:00 மணிக்கு, நண்பர்களுடன் நல்லியாம்புதுார் பிரிவு அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.சரியாக நீச்சல் தெரியாத நிலையில், கிணற்றில் குதித்த ராகுல், மீண்டும் மேலே வரவில்லை. நண்பர்கள், உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. மாலை 4:00 மணிக்கு சேலம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடி அரை மணி நேரத்திற்கு பின், ராகுலை சடலமாக மீட்டனர். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை