பள்ளி வளாகத்தில் சிக்கிய மரநாய்
ராசிபுரம், ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில், வித்தியாசமான விலங்கு இருப்பதை பார்த்து, மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் வந்து பார்ப்பதற்குள், அந்த விலங்கை அருகில் இருந்த தெருநாய்கள் துரத்த தொடங்கின. உடனடியாக விலங்கு அருகில் இருந்த மரத்தில் ஏறிக்கொண்டது. ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், விலங்கை பிடித்து பார்த்தபோது அது மரநாய் என தெரிந்தது. மரநாயை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.