பைக்குடன் கிணற்றில் மோதி உள்ளே விழுந்த வாலிபர் பலி
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியை சேர்ந்த பாக்கு தொழிலாளி மாதையன், 23, குடும்பத்துடன் பொன்னாரம்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 8:50 மணிக்கு அவரது நண்பர் கோபிநாத் என்பவரின் யமஹா சல்யூடோ பைக்கில், அதே பகுதியில் உள்ள அக்கா கோகிலா வீட்டிற்கு சென்றார். அப்போது, பொன்னாரம்பட்டி பகுதியில் செல்லும் வழியில் உள்ள, புஷ்பா என்பவரின் கிணற்று தடுப்பு சுவரில் பைக் மோதி, மாதையன் துாக்கி வீசப்பட்டு கிணற்றில் விழுந்தார்.வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி மாதையனை மீட்டனர். அப்போது, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி திவ்யா, 23, கொடுத்த புகார்படி வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.மாதையனுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.