உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீசாரை இடம் மாற்றக்கோரி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

போலீசாரை இடம் மாற்றக்கோரி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர்: மேச்சேரி போலீசார் மூன்று பேரை, இடம் மாற்றக்கோரி, பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், இரு தரப்பினர் மீதான வழக்கு தொடர்பாக பேச, பா.ம.க.,வை சேர்ந்த வக்கீல் பகத்சிங், கடந்த மாதம், ஸ்டேஷனுக்கு சென்றார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பகத்சிங்கை, 3 மணி நேரம் வெளியே விடாமல் ஸ்டேஷனில் இருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் போலீசாரை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்தார். இதுகுறித்து சதாசிவம் கூறுகையில், ''எஸ்.எஸ்.ஐ.,க்கள் கோவிந்தராஜ், சுதாகர், தனிப்பிரிவு ஏட்டு வெங்கடேஷ் ஆகியோரை வேறு ஸ்டேஷனுக்கு மாற்ற வேண்டும். போலீசாரை இடம் மாற்றாவிட்டால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ