மேலும் செய்திகள்
ரூ.2.37 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
08-Oct-2024
நங்கவள்ளி: நங்கவள்ளி வட்டாரத்தில், 900 ஹெக்டேரில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து கொப்பரை ஏலத்துக்கு ஓமலுார், மேச்சேரி, கொங்கணாபுரம் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் சென்றனர். இதனால் நங்கவள்ளி வட்டாரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க, கோரிக்கை விடுத்தனர்.அதன்படி சூரப்பள்ளி, நரியம்பட்டியில், 50 டன் கொப்பரை வைக்கக்கூடிய அளவுக்கு, உலர் காற்றுடன் கூடிய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதன்முதலாக ஏலம் நேற்று நடந்தது. மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனையாளர் மாதவன் தலைமை வகித்தார். அதில், 13 விவசாயிகள், 957 கிலோ கொப்பரையை கொண்டு வந்தனர். 7 வியாபாரிகள், கிலோ, 83.89 முதல், 120.39 ரூபாய் வரை ஏலம் கோரினர். இதுகுறித்து நரியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனையாளர் மோகன்குமார் கூறுகையில், ''இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திங்கள் தோறும் கொப்பரை ஏலம் நடக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,'' என்றார்.
08-Oct-2024