மேலும் செய்திகள்
தனியார் கல்லுாரி பஸ் மீது லாரி மோதி 9 பேர் காயம்
01-Jan-2025
ஓமலுார்: பெரம்பலுார் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார், 47. லாரி டிரைவரான இவர், குஜராத்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, பெங்களூரு நைஸ் ரோடு அருகே விபத்து ஏற்பட்டதில், முத்துக்குமாருக்கு வலது கால் முறிவு, வயிறு பகுதியில் உள்ளடி ஏற்பட்டு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்க அழைத்து வந்துகொண்டிருந்தனர்.ஆனால் தொப்பூர் அருகே வந்தபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவு இல்லாதது தெரிந்தது. இதனால் நேற்று மதியம், ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓமலுார் போலீசார், கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
01-Jan-2025