உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒன்றிய அலுவலகம் கட்ட நடவடிக்கை

ஒன்றிய அலுவலகம் கட்ட நடவடிக்கை

ஓமலுார்: ஓமலுார் ஒன்றிய அலுவலக கட்டடம், 1963ல் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் சீரமைப்பு பணி செய்து, அதே கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதே வளாகத்தில் ஓமலுார் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகமும் செயல்படுகிறது. தாலுகா அலுவலகம் அருகே, ஒன்றிய அலுவலகம் உள்ளதால், மக்களும் வந்து செல்ல வசதியாக உள்ளது.இந்நிலையில் அந்த பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்ட, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு, 5 கோடி ரூபாய் மதிப்பில், காற்றோட்டம், வெளிச்சத்துடன் கூடிய ஓ.டி.எஸ்., மாடலில்(கட்டடம் நடுவே திறந்தவெளி) கட்டடம் அமைக்கப்படவுள்ளது. அதற்கு ஆன்லைன் மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை