உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது அ.தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை பாயும்

முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது அ.தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை பாயும்

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து நிர்வாகங்களை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமை வகித்தார்.அதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதிகளில், 24 மணி நேரமும் சந்துக்கடை, ஒரு நெம்பர் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது, போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சியில் உள்ள கமிஷனர், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள், பதவியில் இருக்கும் வரை, முறைகேடு செய்து கொள்ளையடிக்கலாம் என நினைக்கின்றனர். 2026ல் தமிழக முதல்வராக இ.பி.எஸ்., வந்ததும், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி