உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சொட்டு நீர் பாசன வயல்களில் கூடுதல் இயக்குனர் கள ஆய்வு

சொட்டு நீர் பாசன வயல்களில் கூடுதல் இயக்குனர் கள ஆய்வு

அ.பட்டணம், :மாநில தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் சாந்தா ஷெலின் மேரி, அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்த வயல்களில் நேற்று முன்தினம் விவசாயிகளை சந்தித்தார். நுண்ணீர் பாசன குழாய்களின் செயல்பாட்டை கள ஆய்வு செய்தார். இதுகுறித்து சாந்தா ஷெலின் மேரி கூறியதாவது: வட்டாரத்தில், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரவள்ளி, மஞ்சள், காய்கறி, மலர்கள், தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெற்று வருகின்றனர். நடப்பு நிதியாண்டில், 320 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க பதிவு செய்யப்படுகிறது. விவசாயிகள் இந்த மானிய திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா, தோட்டக்கலை அலுவலர் கிருத்திகா, உதவியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ