உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 27ல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க அறிவுரை

27ல் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க அறிவுரை

27ல் பிறக்கும் குழந்தைகளுக்குதங்க மோதிரம் வழங்க அறிவுரைமேட்டூர், நவ. 21-மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி சட்டசபை தொகுதிகள் அடங்கிய சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், கருமலைக்கூடலில் நேற்று நடந்தது. சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமை வகித்து பேசியதாவது:வரும், 27ல், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள். அன்று கட்சியினர், அன்னதானம், ரத்ததானம் செய்வதோடு, சேலம் மேற்கு மாவட்டத்தில், 3 சட்டசபை தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, பொருளாளர் பொன்னுசாமி, துணை செயலர்கள் சம்பத், எலிசபெத் ராணி, மேட்டூர் சட்டசபை தொகுதி பார்வையாளர் ரியா, நங்கவள்ளி ஒன்றிய செயலர் அர்த்தநாரி ஈஸ்வரன், வீரக்கல்புதுார், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து செயலர்கள் முருகன், குமார், சங்ககிரி, இடைப்பாடி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை